கணவருடன் போட்டியில்லை : சமந்தா

தினமலர்  தினமலர்
கணவருடன் போட்டியில்லை : சமந்தா

திரையுலக வரலாற்றில் இப்படியான விஷயம் நடக்குமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா. தமிழில் அவர் நாயகியாக நடித்துள்ள இரண்டு படங்களான 'சீமராஜா, யு டர்ன்' படங்கள் நாளை ஒரே நாளில் வெளியாகின்றன. இதில் 'யு டர்ன்' படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. அதே சமயம், தெலுங்கில் சமந்தாவின் கணவரான நாகசைதன்யா நடித்துள்ள 'ஷைலஜா ரெட்டி அல்லுடு' படமும் வெளியாகிறது.

கணவர் நாகசைதன்யா படத்துடன் மனைவி சமந்தாவும் போட்டி போடுகிறார். சமந்தா, தமிழில் தனக்குத் தானே போட்டியாகவும், தெலுங்கில் கணவரை எதிர்த்து போட்டி போடுவதும் ஒரு சுவாரசியமான விஷயமாகும். இது பற்றி சமந்தா கூறும் போது, “எங்களுக்கு இடையில் போட்டியெல்லாம் இல்லை. எந்த ஒரு மனைவியும் கணவரை எதிர்த்து எப்போதும் போட்டி போட மாட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இதை நாங்கள் அனுபவித்து வருகிறோம்,” என்கிறார்.

தற்போதையை தகவலின் படி சமந்தாவிற்கு நாளைய தினம் மூன்று வெற்றி உறுதி என்கிறது திரையுலக வட்டாரம். 'சீமராஜா, யு டர்ன், ஷைலஜா ரெட்டி அல்லுடு' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றே தகவல் பரவியுள்ளது. தனக்கான இரண்டு வெற்றி, கணவருடைய வெற்றி என மூன்று வெற்றியை சமந்தா கொண்டாடிவிடுவார் என்கிறார்கள்.

மூலக்கதை