செலவு ரூ.5 கோடி, வரவு ரூ.120 கோடி : 'கீதா கோவிந்தம்' வசூல்

தினமலர்  தினமலர்
செலவு ரூ.5 கோடி, வரவு ரூ.120 கோடி : கீதா கோவிந்தம் வசூல்

தெலுங்குத் திரையுலகின் சமீபத்திய சூப்பர் ஹிட் படமாக 'கீதா கோவிந்தம்' படம் அமைந்துள்ளது. பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம், கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வசூலைக் குவித்தது.

26 நாட்களுக்குள் இப்படம் 120 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டின் அதிக வசூலைக் குவித்த தெலுங்குப் படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'அஞ்ஞாதவாசி', அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'நா பேரு சூர்யா' படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.

இப்படத்தின் உரிமையை வாங்கிய விலையிலிருந்து நான்கு மடங்கு அதிகமான வசூலை இந்தப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது என்கிறார்கள். இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொன்டா நடித்து அடுத்து தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள 'நோட்டா' படத்தின் வியாபாரத்திற்கு பெரிய உறுதுணையாக இருக்கப் போகிறது.

மூலக்கதை