விமானப்படையில் போர் விமானங்கள் பற்றாக்குறை: இந்திய விமானப்படை தளபதி வீரேந்திர சிங் தகவல்

தினகரன்  தினகரன்
விமானப்படையில் போர் விமானங்கள் பற்றாக்குறை: இந்திய விமானப்படை தளபதி வீரேந்திர சிங் தகவல்

புதுடெல்லி: இந்திய விமான படையில் போர் விமானங்கள் பற்றாக்குறை நிலவுவதாக விமானப்படை தளபதி வீரேந்திர சிங் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சீனா தனது படைபலத்தை வலுப்படுத்திவருவதாக கூறினார். சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்படும் நிலையில் அந்நாடுகளை ஒருசேர எதிர்கொள்ளும் அளவிற்கு இந்திய விமானப்படை வலுவாக இல்லை என்பது அவரது கருத்து. விமானப்படையில் நிலவும் பற்றாக்குறையை தீர்க்கவே 2012-ம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மன்மோகன் அரசு தீர்மானித்திருந்தது. அனால் அதை ரத்து செய்துவிட்டு 36 ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக வாங்க மோடி அரசு செய்த ஒப்பந்தத்தின் விலையில், ஊழல் புகார்களால் கேள்விக்குறியாகியுள்ளது.

மூலக்கதை