வங்கக் கடலில் காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கக் கடலில் காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக வளிமண்டலத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று மாலை 5. 30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 23. 8 மி. மீ, மதுரை விமான நிலையத்தில் 21, நாமக்கலில் 17, ஊட்டி, தர்மபுரியில் 10 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக 100. 4 டிகிரி பாரன்ஹீட் வெயில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பதிவானது.
 
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் கூறியுள்ளதாவது: கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில  இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.

இவ்வாறு வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை