அமெரிக்காவின் 'இளம் அறிஞர் விருது' பெறும் தமிழ் பெண் இராஜலட்சுமி நந்தகுமார் -வாழ்த்துகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவின் இளம் அறிஞர் விருது பெறும் தமிழ் பெண் இராஜலட்சுமி நந்தகுமார் வாழ்த்துகள்

அமெரிக்காவின் 'இளம் அறிஞர் விருது' பெறும் தமிழ் பெண் இராஜலட்சுமி நந்தகுமார் -வாழ்த்துகள்

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் எனும் மாணவி, அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், "2018 Marconi Society paul Baran young Scholar"இளம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் மதுரை டிவிஎஸ். லக்ஷ்மி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து பின்பு கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை முடித்து, மைக்ரோசாப்ட் ஆய்வகத்தில் பெங்கலூரில் பணிபுரிந்து தற்போது ஆராய்ச்சி மேற்படிப்பை வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவருகிறார்.

இவரது ஆய்வில், நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டு பிடிக்கும் "சோனார்"தொழில் நுட்பத்தை ஸ்மார்ட் போனில் பயன் படுத்துவது தொடர்பானவற்றையும்,மற்றும் இவர் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரது உடலைத் தொடாமலேயே ஸ்மார்ட் போன் மூலம் அவரகளது உடலில் ஏற்படும் செயல்பாடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தைக் ராஜலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

இவரது கண்டு பிடிப்பு மருத்துவம் மற்றும் தொழில் நுட்பஉலகுக்கு உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.

இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தமிழ் இளைஞர்களுக்கு இவரது கண்டுபிடிப்பு குறித்து அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல தமிழ்ச்சங்கங்கள் ஆர்வமாக உள்ளன.

வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள் .. இராஜலட்சுமி ...

மூலக்கதை