புகை பிடிக்கும் ஸ்ரேயா : பிறந்த நாள் அதிர்ச்சி வீடியோ

தினமலர்  தினமலர்
புகை பிடிக்கும் ஸ்ரேயா : பிறந்த நாள் அதிர்ச்சி வீடியோ

அதிரடியான படங்களைக் கொடுப்பதில் தெலுங்குத் திரையுலகத்தை மிஞ்ச முடியாது. சமீப காலங்களில் தெலுங்கிலும் கமர்ஷியல் படங்களை மீறி சில வித்தியாசமான படங்கள் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் நர ரோகித், ஸ்ரேயா, சுதீர் பாபு மற்றும் பலர் நடிக்க 'வீர போக வசந்த ராயலு' என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் பார்வை ஏற்கெனவே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று படத்தின் நாயகி ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் 'ஸ்னீக் பீக்' ஆக வெளியாகியுள்ள அந்த வீடியோவில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. பிறந்த நாள் அதுவுமாக அந்த வீடியோவை வெளியிட்டு அதில் ஸ்ரேயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். எப்படியெல்லாம் படத்திற்கு பரபரப்பு தேடுகிறார்கள் ?.

மூலக்கதை