சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்

தினமலர்  தினமலர்
சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்

2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதால் சுமாரான படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் சீனாவில் வெளியாகயிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், தற்போது மெர்சல் படம் டிசம்பர் 6-ந்தேதி சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் மெர்சலுக்கு கிடைக்க இருக்கிறது.

மூலக்கதை