விஜய் பட விழாவில் ரஜினி?

தினமலர்  தினமலர்
விஜய் பட விழாவில் ரஜினி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் படம் சர்கார். விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. அக்டோபர் 2ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சர்கார் படத்தின் ஆடியோவை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்கார் படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான், ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது. அதன் காரணமாக இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை