பிஷப் பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார்: நீதிமன்றத்தில் நாளை விசாரணை அறிக்கை தாக்கல்

தினகரன்  தினகரன்
பிஷப் பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார்: நீதிமன்றத்தில் நாளை விசாரணை அறிக்கை தாக்கல்

கோட்டயம்: கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்கோ விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கோட்டயம் மாவட்ட எஸ்.பி. ஹரிஷங்கர் விசாரணை அறிக்கை நாளை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்து கொச்சியில் கத்தோலிக்க கிருஸ்துவ அமைப்புகளை சேர்ந்த பெண்கள் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பணிபுரியும் பிஷப் பிராங்கோவை கண்டித்து மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை