மத்திய பிரதேசத்தில் காவலர்களை தாக்கி விசாரணை கைதி தப்பி ஓட்டம்

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேசத்தில் காவலர்களை தாக்கி விசாரணை கைதி தப்பி ஓட்டம்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதியால் காவலர்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி பிந்த் நகர காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு காவலர்களை பின்புறமாக சென்று பயங்கரமாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர்கள் மயங்கியதும் கைதி தப்பியோடும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பின்பு பலத்த காயங்களுடன் இருந்த இரண்டு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு தவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டெல்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துக்கப்பட்ட காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூலக்கதை