லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து : 100 பேர் பலி

தினகரன்  தினகரன்
லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து : 100 பேர் பலி

கெய்ரோ: லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. அந்தப் படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

மூலக்கதை