டெல்லியில் தலைமை காவலர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
டெல்லியில் தலைமை காவலர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை

டெல்லி: டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக சுட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை