திருமணத்தில் ஏற்பட்ட விபரீதம்! பதறி ஒடிய உறவினர் - வவுனியாவில் சம்பவம்

PARIS TAMIL  PARIS TAMIL
திருமணத்தில் ஏற்பட்ட விபரீதம்! பதறி ஒடிய உறவினர்  வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இடம்பெற்ற திருமணத்தில் நடந்த அடிதடியால் விருந்தாளிகள் அனைவரும் ஓட்டமெடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
முன்னதாக திருமணம் முடித்த இரண்டு மனைவிகளையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு மூன்றாவது திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
மூன்றாவது திருமணம் செய்து கொள்ள தயாரான மாப்பிள்ளையான ஆசிரியர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
 
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டுள்ளார்.
 
கிளிநொச்சியிலும் ஒரு திருமணம் முடித்துவிட்டு அப்பெண்ணையும் கைவிட்டு விட்டு வவுனியாவில் மூன்றாவது திருமணம் செய்வதற்கு தயாராகி உள்ளார்.
 
இவ்விடயம் குறித்து இரண்டாவது மனைவி தெரிவிக்கும் போது,
 
“கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்ணை இவர் கை விட்டுள்ளார்.
 
இதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளை கவனித்து வருகின்றார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னை திருமணம் செய்து கொண்டார். இதற்கான ஆதாரங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன.
 
தற்போது என்னையும் கைவிட்டு இன்று வவுனியா, கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்கு தெரியவந்துள்ளது.
 
எனவே இதனை தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையை கிழிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்து கொண்டுள்ளேன்.
 
கடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரண்பட்டுக் கொண்டிருந்ததுடன் சீதனம் கேட்டு வற்புறுத்தியும் வந்தார்.
 
இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இதனால் என்னை கைவிட்டு விட்டு சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புகளுடனே இருந்தார்.
 
இதையடுத்து எனக்கு தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்து கொண்டேன். அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை கடந்த 2017.12.22, 2018.02.03 அன்றைய தினங்களில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று 2018.09.10 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித் திருமணம் முடித்துள்ளதாக முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இன்று காலை கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
குறித்த நபர் பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாக இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் மாப்பிள்ளையான ஆசிரியரை தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை