மலேசிய மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
மலேசிய மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு   உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு டன்னுக்கு ரூ.2,050 வீதம்  55,443 மெட்ரிக் டன் மணலுக்கான தொகையை செலுத்த ஆணையிட்டுள்ளது.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்தது. தூத்துக்குடியில் இறக்குமதியான மணலை வெளியே எடுத்து செல்ல தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. மணலை விற்க அனுமதி கோரி ராமையா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது.இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வெளிநாட்டு மணலுக்கான தொகையை ஒரு வாரத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை  21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை