அமெரிக்கா - இந்தியா புதிய ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்

நியூயார்க்: அமெரிக்கா வர்த்தகம் தொடர்பாக இந்தியா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பின்னரும் தங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் பல நாடுகள் தற்போது அமெரிக்காவை மதிக்க கற்றுக்கொண்டுள்ளது.இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகள் என்று தாங்களே கூறிக்கொள்கிறது. இதை சொல்லிக்கொண்டே அமெரிக்காவின் மானியத்தை பெற்றுக்கொள்கிறது. இந்த மானியத்தை நிறுத்த உள்ளேன்.அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100சதவீத வரிவிதிக்கிறது. ஆனாலும் தற்போது அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இந்தியா முன்வந்துள்ளது. இதற்கு வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதே காரணம். முந்தைய அரசுகளுடன் இந்தியா இதுபோல் பேசியது இல்லை, என டிரம்ப் தெரிவித்துள்ளார்.புதிய வர்த்தக ஒப்பந்த பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மூலக்கதை