பிரேசில் சிறையிலிருந்து 105 கைதிகள் தப்பினர்

தினமலர்  தினமலர்

பிரேசிலியா: பிரேசிலின் பரைபா மாகாணம், ஜாவோ பெசாயோ உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 105 கைதிகள் துப்பாக்கி முனையில் தப்பியோடினர். இதில் 33 பேரை சிறைக்காவலர்கள் மீண்டும் சிறைத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.நான்கு வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சிறைக்குள் திடீரென நுழைந்த 20 பேர் கைகளில் துப்பாக்கி வைத்திருந்ததோடு பாதுகாப்பு அதிகாரிகள் இருந்த பகுதியை நோக்கி வெடிபொருட்களை வீசி வெடிக்கச் செய்தனர்.அவர்களைத் தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை சுட்டு விட்டு சிறைச்சாலையின் கதவை மூடி அவர்களுக்கு தேவையான 105 கைதிகளை விடுவித்தனர். சிறைச்சாலைக்கு வெளியே தப்பிய கைதிகளை அழைத்து செல்ல வந்தவர்கள், சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 36 வயது போலீஸ்காரரை சுட்டது. உள்ளே கைதிகள் தப்பியதற்கும் வெளியில் போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் ஒரே பயங்கரவாதக் கும்பலே காரணம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உச்ச பட்ச கண்காணிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள சிறையிலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள கல்லூரிகள், மருத்துவமனைகள் மூடப்பட்டன.

மூலக்கதை