நவாஸ் ஷெரீப் மனைவி லண்டனில் காலமானார்

தினமலர்  தினமலர்
நவாஸ் ஷெரீப் மனைவி லண்டனில் காலமானார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சும், புற்று நோய் பாதிப்பால், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று காலமானார்.அண்டை நாடான, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரது மனைவி குல்சும், 68, உடல் நலக் குறைவு காரணமாக, 2014ல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, குல்சும் காலமானதாக, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர், ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.குல்சுமின் உடல், பாகிஸ்தானுக்கு எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.குல்சுமின் மரணம் குறித்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுஉள்ள, நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்க, அவர்களுக்கு, 'பரோல்' வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குல்சுமின் மரணத்துக்கு, தற்போதைய பிரதமர், இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை