கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை அதிர வைக்கும் அமெரிக்க அரசியல் விளையாட்டு

தினமலர்  தினமலர்
கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை அதிர வைக்கும் அமெரிக்க அரசியல் விளையாட்டு

புதுடில்லி:வளை­குடா நாடு­கள் தவிர்த்து, அமெ­ரிக்­கா­வில் கச்சா எண்­ணெய் உற்­பத்தி அதி­க­ரித்­துள்ள போதி­லும், அதன் விலை குறை­வ­தற்­கான சூழல், தெரி­ய­வில்லை.


கடந்த, 2016 வரை, கச்சா எண்­ணெய் உற்­பத்­திக்கு ஏற்ப, தேவை உய­ரா­த­தால், அதன் விலை, குறைந்து காணப்­பட்­டது. ஒரு கட்­டத்­தில், ஒரு பீப்­பாய், ‘பிரென்ட்’ கச்சா எண்­ணெய் விலை, 24 டாலர் வரை கூட சரிந்­தது.

பிரென்ட் கச்சா எண்­ணெய் என்­பது கச்சா எண்­ணெய் ரகங்­களில் ஒரு­வகை. இது அடர்த்தி குறை­வாக இருக்­கும். பிரென்ட் கச்சா எண்­ணெய் விலை சரிந்­த­தற்கு, அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் மற்­றும் பாறை­களில் இருந்து எடுக்­கப்­படும் ‘ஷேல்’ காஸ் உற்­பத்தி அதி­க­ரிப்பு; பொரு­ளா­தார தடை நீக்­கப்­பட்ட பின், ஈரான் மீண்­டும் கச்சா எண்­ணெயை சர்­வ­தேச சந்­தைக்கு அனுப்­பி­யது ஆகிய கார­ணங்­களை குறிப்­பி­ட­லாம்.


அத­னால், இனி கச்சா எண்­ணெய் விலை, கட்­டுக்­குள் இருக்­கும் ; இத­னி­டையே, வள­ரும் நாடு­கள், உயிரி எரி­பொ­ருள் பயன்­பாட்டை அதி­க­ரித்து, கச்சா எண்­ணெய் சார்பு நிலையை குறைத்­துக் கொள்­ளும் என்­பது, சந்­தை­யா­ளர்­களின் அனு­மா­ன­மாக இருந்­தது.


சுத்திகரிப்பு


இந்த இரு கணிப்­பு­களும் ஓர­ளவு சாத்­தி­ய­மான போதி­லும், ஒரு பீப்­பாய் கச்சா எண்­ணெய் விலை, கிடு­கி­டு­வென உயர்ந்து, 70–-7௮ டாலரை எட்­டி­யுள்­ளது.இதற்கு, கச்சா எண்­ணெய் ஏற்­று­மதி நாடு­களின் கூட்­ட­மைப்­பான ‘ஒபெக்’, கச்சா எண்­ணெய் உற்­பத்­தியை, நாள் ஒன்­றுக்கு, 18 லட்­சம் பேரல் குறைத்­தது என்­பது, பொது­வான கார­ணம்.


ஆனால், கச்சா எண்­ணெய் விலை உய­ரும் போதெல்­லாம், ‘ஒபெக்’ நாடு­களின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க நிர்­பந்­திக்­கும் அமெ­ரிக்கா, தற்­போது மவு­ன­மாக இருப்­பது, மற்­றொரு கார­ணம்
என­லாம். அமெ­ரிக்கா, கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், அமெ­ரிக்கா, மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னே­றி­யுள்­ளது. அதன், 'டெக்­சாஸ் லைட் ஸ்வீட்' ரக கச்சா எண்­ணெய், வளை­குடா நாடு­களின் 'பிரென்ட்' ரக கச்சா எண்­ணெய்யை விட­வும், அடர்த்தி குறை­வா­னது.


ஆனால், இந்­தியா, சீனா போன்ற நாடு­களில் உள்ள சுத்­தி­க­ரிப்பு தொழிற்­சா­லை­கள், 'பிரென்ட்' கச்சா எண்­ணெய்க்கு ஏற்ற, தொழில்­நுட்­பங்­க­ளு­டன் செயல்­பட்டு வரு­கின்றன.அத­னால், அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில், அதி­கம் ஆர்­வம் காட்­டு­வ­தில்லை.இத்­த­னைக்­கும், 'பிரன்ட்' ஐ விட, அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் விலை குறை­வு­தான். இருந்­தும், சுத்­தி­க­ரிப்பு செல­வி­னங்­கள் கார­ண­மாக, லாப வரம்பு குறை­யும் என்­ப­தால், அதி­கம் இறக்­கு­மதி செய்­வ­தில்லை.


ஆனால், தற்­போது பல நாடு­கள், அமெ­ரிக்க கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்­யத் துவங்­கி­யுள்ளன. அதற்­காக, நவீன தொழில்­நுட்­பத்­தில், சுத்­தி­க­ரிப்பு தொழிற்­சா­லை­களை அமைத்து வரு­கின்றன.இதை­ய­டுத்து, அமெ­ரிக்­கா­வின் கச்சா எண்­ணெய் உற்­பத்தி அதி­க­ரித்­த­போ­தி­லும், சர்­வ­தேச சந்­தை­யில் அதன் விலை குறை­வில்லை. இதன் பின்­ன­ணி­யில் தான், அமெ­ரிக்­கா­வின் அர­சி­யல் விளை­யாட்டு உள்­ளது.

கச்சா எண்­ணெய் விலை உயர்வு, அமெ­ரிக்­காவை பொருத்­த­வரை, டாலர் மதிப்­பி­லும், வர்த்­த­கப் பற்­றாக்­கு­றை­யி­லும் மிகக் குறை­வான தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இன்­னும் சொல்­வ­தென்­றால், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், அமெ­ரிக்கா பய­ன­டைந்து வரு­கிறது; அதன் பொரு­ளா­தா­ரம், வளர்ச்சி கண்டு வரு­கிறது. அமெ­ரிக்கா, நிகர கச்சா எண்­ணெய் உற்­பத்­தி­யில், வெகு விரை­வில், ரஷ்­யாவை விஞ்­சும் என, ஆய்­வு­கள் கூறு­கின்றன.


அத­னால் தான், கச்சா எண்­ணெய் விலை உய­ரும்­போது, உற்­பத்­தியை அதி­க­ரிக்­கு­மாறு, 'ஒபெக்' நாடு­களை நிர்­பந்­திக்­கா­மல், அமெ­ரிக்கா மவு­ன­மாக உள்­ளது.மேலும், ஈரான் மீது பொரு­ளா­தார தடையை அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ள­தால், பல நாடு­கள், ஈரான் கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தியை நிறுத்த வேண்­டிய நிர்­பந்­தத்­திற்கு ஆளா­கி­யுள்ளன.


இந்­நி­லை­யில், கச்சா எண்­ணெய் உற்­பத்தி குறைப்பு இந்­தாண்டு வரை நீடிக்­கும் என, ஒபெக்
நாடு­கள் அறி­வித்­துள்ளன. அத­னால், சப்­ளைக்­கும், தேவைக்­கும் உள்ள இடை­வெளி மேலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தால், கச்சா எண்­ணெய் விலை, குறைய வாய்ப்­பில்லை.


நடப்பு கணக்கு


கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், இந்­தி­யா­வுக்கு இறக்­கு­மதி செல­வி­னம் அதி­க­ரிக்­கும். உல­க­ள­வில் கச்சா எண்­ணெய் வர்த்­த­கம், அமெ­ரிக்க டால­ரில் தான் நடை­பெற்று வரு­கிறது.
அத­னால் எந்த நாட்­டி­லி­ருந்து கச்சா எண்­ணெய் வாங்­கி­னா­லும், டால­ரில் தான் இந்­தியா வாங்க வேண்­டும். தற்­போது, டாலர் மதிப்பு உயர்ந்து, அதற்கு நிக­ரான ரூபாய் மதிப்பு குறைந்­துள்­ளது.
அத­னால், கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­திக்கு, இந்­தியா அதிக டாலர்­களை தர நேரிட்­டுள்­ளது. இத­னால், நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை சுமை மேலும் அதி­க­ரிக்­கும் என, சந்­தை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.


மாற்று ஏற்­பாடு


இந்­தி­யா­வும், சீனா­வும், கச்சா எண்­ணெய் தேவை­யில், 80 சத­வீ­தத்தை, இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்து கொள்­கின்றன. இரு நாடு­களின் பொரு­ளா­தார வளர்ச்சி கார­ண­மாக, கச்சா எண்­ணெய் தேவை, மேலும் உய­ரவே செய்­யும். அத­னால், இறக்­கு­மதி செல­வும் அதி­க­ரிக்­கும். உயிரி எரி­பொ­ருள் மற்­றும் மரபு சாரா எரி­சக்தி பயன்­பாட்டை அதி­க­ரிப்­பது ஒன்றே, லாப­க­ர­மான மாற்று ஏற்­பா­டாக இருக்­கும் என, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மூலக்கதை