உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு கட்டணம் குறைக்க திட்டம்

தினமலர்  தினமலர்
உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு கட்டணம் குறைக்க திட்டம்

அரசு கேபிள், ‘டிவி’யில், உள்­ளூர் சேனல்­களை ஒளி­ப­ரப்­பு­வ­தற்­கான கட்­ட­ணத்தை குறைக்க, நிர்­வா­கக் குழு கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.


தமி­ழக அரசு, கடந்த, 2007ம் ஆண்டு, அரசு கேபிள், ‘டிவி’யை துவங்­கி­யது. 2011ம் ஆண்டு முதல், குறைந்த கட்­ட­ண­மாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்­கள் என, முழு வீச்­சில் தன் சேவை­யில் ஈடு­பட்­டது.கடந்த, 2014ம் ஆண்டு முதல், சென்னை உட்­பட நான்கு மாந­க­ரங்­களில், ‘டிஜிட்­டல்’ முறை­யில் கேபிள், ‘டிவி’ சேவை துவங்­கப்­பட்­டது.


தமி­ழ­கம் முழு­வ­தும், 27.5 லட்­சம், ‘செட் டாப் பாக்ஸ்’கள், இது­வரை வழங்­கப்­பட்­டுள்ளன. இந்­நி­லை­யில், உள்­ளூர் சேனல்­களை ஒளி­ப­ரப்­பு­வது தொடர்­பான, ‘டெண்­டர்’ சமீ­பத்­தில்
அறி­விக்­கப்­பட்­டது.இதற்கு, உள்­ளூர் சேனல் உரி­மை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து, சரி­யான வர­வேற்பு இல்­லா­த­தால், கட்­ட­ணத்தை குறைக்க, கேபிள், ‘டிவி’ நிர்­வா­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.


இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ ஆப­ரேட்­டர்­கள் சங்­கம் சார்­பில் கூறி­ய­தா­வது:அரசு கேபிள், ‘டிவி’யில் 70 லட்­சம் வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ள­னர். ‘அன­லாக்’ முறை ஒளி­ப­ரப்­பின் போது, 1,000 உள்­ளூர் சேனல்­கள், அரசு கேபிள், ‘டிவி’யில் ஒளி­ப­ரப்­பா­கின.


இதற்­காக, 6 கோடி ரூபாய் வரை, கட்­ட­ணம் செலுத்­தப்­பட்­டது. டிஜிட்­டல் முறைக்கு மாறிய பின், சமீ­பத்­தில் இதற்­கான புதிய டெண்­டர் அறி­விக்­கப்­பட்­டது.இதில், 250 உள்­ளூர் சேனல்­கள் கூட விண்­ணப்­பிக்­க­வில்லை. இந்­நி­லை­யில், அரசு கேபிள், ‘டிவி’ நிர்­வாக குழு கூட்­டம், சென்­னை­யில் நேற்று நடந்­தது.


இதில், உள்­ளூர் சேனல்­களை ஒளி­ப­ரப்­பு­வ­தற்­கான கட்­ட­ணத்தை குறைக்க, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­ட­தாக தக­வல்­கள் கிடைத்­துள்ளன.டிஜிட்­டல் முறைக்கு மாறிய, 27 லட்­சம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்ப, புதிய கட்­டண தொகை நிர்­ண­யிக்­கப்­பட்டு, விரை­வில் இதற்­கான டெண்­டர் அறி­விப்பு வெளி­யிட, குழு­வில் முடிவு செய்­யப்­பட்­ட­தாக தக­வல்
கிடைத்­துள்­ளது. இது தொடர்­பான அறி­விப்பு விரை­வில் வரும் என, எதிர்­பார்க்­கி­றோம்.
இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மூலக்கதை