‘ஜிம் – 2’ மாநாட்டில் வேலைவாய்ப்பு தொழில்களுக்கு முக்கியத்துவம்

தினமலர்  தினமலர்
‘ஜிம் – 2’ மாநாட்டில் வேலைவாய்ப்பு தொழில்களுக்கு முக்கியத்துவம்

இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், வேலை­வாய்ப்பு அதி­கம் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு, முத­லீடு செய்ய அழைப்பு விடுக்­கப்­பட்டு வரு­கிறது என, தொழில் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சென்­னை­யில், 2019, ஜன­வரி 23, 24ம் தேதி­களில், ‘ஜிம் – 2’ எனும் இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெற உள்­ளது. இதற்­காக பல்­வேறு பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து
வரு­கின்றன.இதற்­காக, பல்­வேறு வெளி­நாட்டு தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன், தமி­ழக தொழில் வளர்ச்சி மேம்­பாட்டு நிறு­வன அதி­கா­ரி­கள், தொடர்ந்து ஆலோ­சனை நடத்தி வரு­கின்­ற­னர்.


இதில், வேலை­வாய்ப்பு அதி­கம் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு, முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் வகை­யில் பேச்சு நடை­பெ­று­கிறது.இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள்
கூறி­ய­தா­வது:


அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் நடை­பெற உள்ள சர்­வ­தேச மாநாட்­டில், வேலை­வாய்ப்பு அதி­கம் உள்ள தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றோம்.ஏற்­க­னவே, தமி­ழ­கத்­தில் தொழில் துவங்கி, விரி­வு­ப­டுத்த விரும்­பும் நிறு­வ­னங்­கள், புதி­தாக தொழில் துவங்க விரும்­பும், ஆட்டோ மொபைல், உதிரி பாகங்­கள், எலக்ட்­ரா­னிக்ஸ், டெக்ஸ்­டைல் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு, முக்­கி­யத்­து­வம் வழங்க உள்­ளோம்.


இந்த இலக்கை நோக்­கிய பய­ணம் தான் தற்­போது நடந்து வரு­கிறது. இது போன்ற நிறு­வ­னங்­க­ளு­டன் ஆலோ­சனை நடந்து வரு­கிறது. முதல் சர்­வ­தேச மாநாட்­டில் முத­லீடு செய்த
நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து, இது­வரை, 1.20 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் கிடைத்­துள்ளன.
இவ்­வாறு அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மூலக்கதை