3000 கலைஞர்களின் உழைப்பில் '2.0'

தினமலர்  தினமலர்
3000 கலைஞர்களின் உழைப்பில் 2.0

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சவால் விடுமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படம் '2.0'. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் செப்டம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தியாவின் முதல் 500 கோடி ரூபாய் படம் என்ற பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்காக 3000 கலைஞர்கள் உலகம் முழுவதும் பணியாற்றியிருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு பிரேமையும் அற்புதமான தரத்தில் உருவாக்கியுள்ளார்களாம்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் உலகம் முழுவதிலும் 12 மொழிகளில் வெளியாக உள்ள '2.0' படத்தின் டீசர் யு டியூபில் பெரிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13ம் தேதி '2.0' பற்றிய பேச்சுக்கள்தான் அதிகம் இருக்கப் போகிறது.

மூலக்கதை