திரைகளை ஆக்கிரமிக்கப் போகும் சமந்தா

தினமலர்  தினமலர்
திரைகளை ஆக்கிரமிக்கப் போகும் சமந்தா

ஒரே நாளில் 'டபுள் டிரீட்' என்பது சமந்தா ரசிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். நாளை மறுதினம் செப்டம்பர் 13ம் தேதி சமந்தா நடித்துள்ள 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. 'சீமராஜா' படத்தில் சமந்தாவின் தோற்றமும், அழகும் ரசிகர்களை ஏற்கெனவே கவர்ந்துவிட்டன. அதற்கு சாட்சியாக 'மச்சக்கன்னி' பாடல் அமைந்துவிட்டது. சிவகார்த்திகேயன், சமந்தா கெமிஸ்ட்ரி 'சீமராஜா'வில் சிறப்பாகவே அமைந்துள்ளது என்கிறார்கள்.

'யு டர்ன்' படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'யு டர்ன்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 'யு டர்ன்' படத்தின் 'கர்மா தீம்' பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இரு மொழிகளிலும் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

சமந்தாவின் 'சீமராஜா, யு டர்ன்' என இரண்டு படங்களும் தென்னிந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவதால் திரைகளில் சமந்தாவின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே இருக்கும்.

மூலக்கதை