ராஜ்யசபா தேர்தலில் நோட்டா கூடாது: தலைமை தேர்தல் ஆணையம்

தினமலர்  தினமலர்
ராஜ்யசபா தேர்தலில் நோட்டா கூடாது: தலைமை தேர்தல் ஆணையம்


புதுடில்லி: பார்லி. ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவை அறிமுகப்படுத்த கூடாது என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது 'நோட்டா' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் 'நோட்டா' ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்.கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆக்.21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து டில்லி தலைமைதேர்தல் ஆணையம் மாநில, யூனியன் பிரதேச தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ராஜ்யசபா , மறறும் சட்ட மேலவை தேர்தல்களில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் ஓட்டுச்சீட்டில் 'நோட்டா' பிரிண்டிங் செய்யப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை