நவாஸ் செரீப் மனைவி குல்சும் காலமானார்

தினகரன்  தினகரன்
நவாஸ் செரீப் மனைவி குல்சும் காலமானார்

லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி பேகம் குல்சும் லண்டனில் நேற்று காலமானார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப். ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற இவர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில், அவரது மகள் மரியம், மருமகன் முகமது சப்தாரும் சிறை தண்டனையில் உள்ளனர். நவாஸ் செரீப் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது மனைவி பேகம் குல்சும் (68) பெயரும் இடம்பெற்று, விசாரணை நடந்து வருகிறது. நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பேகம் குல்சும், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். இதுகுறித்த தகவல், சிறையில் இருக்கும் நவாஸ் செரீப்புக்கும், அவரது மகள், மருமகனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடக்க உள்ள இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நவாஸ் செரீப், அவரது மகள் மற்றும் மருமகனுக்கு ஒருநாள் பரோல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

மூலக்கதை