ஆண்டிற்கு 8 லட்சம் பேர் தற்கொலை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஆண்டிற்கு 8 லட்சம் பேர் தற்கொலை!

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் வரை தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்வதாகவும், 2016ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைப் போலவே, தற்கொலைக்கு முயற்சிப்போர் 20 மடங்கு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

குடும்பப் பிரச்னை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.  பெரும்பாலும்  விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக இருப்பதாக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக,  தூக்குப் போட்டுத்  தற்கொலை செய்வதும், தீக்குளிப்பதும் அதிகம் உள்ளன.

பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு அல்லது போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாலும், மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பதாலும்,  தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை