பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது -- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது  இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், செயற்கைக்கோள்களையும், அதனை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. 

இஸ்ரோ நிறுவனமும், அதன் வணிகக் கிளையான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து இங்கிலாந்துக்கு சொந்தமான செயற்கைகோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்காக  ஒப்பந்தம் செய்துள்ளது.

வெள்ளக் கண்காணிப்பு, விவசாய பயிர் மதிப்பீடு, காடுகள் கண்காணிப்பு,  பேரிடர் மேலாண்மை, கடல் பயன்பாடுகளான கப்பல் கண்டறிதல், எண்ணெய்க் கசிவு கண்காணிப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பூமியின் கண்காணிப்புக்காக 430 கிலோ எடை கொண்ட நேவாசார்-எஸ் செயற்கைகோளுடன், 450 கிலோ எடை கொண்ட எஸ்.எஸ்.டி.எல், எஸ்1-4 போன்ற  செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் 16-ந் தேதி இரவு 10.07 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும். இதற்கான ‘கவுண்ட்டவுன்’ 15-ந் தேதி பகல் 1.30 மணிக்கு தொடங்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை