இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசல்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசல்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 5-வது சதம் இதுவாகும். 464 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5-வது நாளான இன்று உணவு இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 108 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் காலத்தில் உள்ளனர்.

மூலக்கதை