ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யும் வண்ணம் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ரோபோ உடை

தினகரன்  தினகரன்
ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யும் வண்ணம் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ரோபோ உடை

டோக்கியோ: மனிதர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் சூப்பர் ரோபோ உடையை வடிவமைத்துள்ளனர். தொழில்துறையில் எந்திரமயமாக்கல் என்ற ரோபோ புரட்சிதான் உலக பொருளாதாரத்தில் திருப்புமுனையாக உள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு பணிகள் கூட ரோபோக்கள் வசமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆடைபோன்று அணிந்து கொள்ளும் ரோபோ ஒன்றை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனிதர்களை போல 2 கைகளும், தலைகளும் உள்ள இந்த ரோபோ வித்யாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பியூஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ உடையை அணிந்துகொண்டு ஒரே நேரத்தில் ஒருவர் பல வேலைகளை செய்ய முடியும். ரோபோவின் 2 கைகள் நம்முடைய 2 கைகளுடன் சேர்த்து 4 கைகள் கிடைக்கும். எனவே நினைக்கும் நேரத்தில் வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும். ரோபோக்களை அணிந்து கொண்டிருப்பவரும், தொலைவில் இருந்து ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ரோபோக்களை இயக்க முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் டெலிபோர்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு தொலைவில் இருக்கும் ஒருவர் வி.ஆர். ஹெட்செட் அணிந்தபடி கட்டளையிடலாம். மொத்தத்தில் மனிதனும், ரோபோவும் இணைந்து இயங்கக்கூடிய இந்த தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ உடை வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மூலக்கதை