பிரிட்டனில் இறந்துபோன மகனின் விந்தணு மூலம் பெற்றெடுத்த பேரக்குழந்தை

தினகரன்  தினகரன்
பிரிட்டனில் இறந்துபோன மகனின் விந்தணு மூலம் பெற்றெடுத்த பேரக்குழந்தை

லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் தனது 26 வயதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர்கள் தங்கள் மகன் மூலம் பேரக்குழந்தை பெற விரும்பினர். அதன்படி இறந்த மகனின் விந்தணுவை எடுத்து சிறுநீரகவியல் நிபுணர் ஒருவரின் உதவி மூலம் பதப்படுத்தினர். பின்னர் பிரிட்டனில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது சட்ட விரோதம் என்பதால், இந்த விந்தணுவை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து அந்த குழந்தை சட்டப்படி பிரிட்டன் அழைத்து வந்தனர். இறந்தவரின் விந்தணு மூலம் குழந்தை பெற்றெடுத்தது பிரிட்டனில் இதுவே முதல் முறை ஆகும். ஆனால் இங்கிலாந்தில் தந்தையின் இறப்புக்குப் பிறகு செயற்கை கருத்தரித்தல் மூலம் வருடத்திற்கு சுமார் 5 குழந்தைகள்  பிறக்கின்றது.

மூலக்கதை