வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை அகதிகள் பலர் நாடு கடத்தல்..!

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை அகதிகள் பலர் நாடு கடத்தல்..!

இலங்கை அகதிகள் ஒரு தொகுதியினை அவுஸ்திரேலியா, மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
25 அகதிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்றைய தினம் இரவு நாடு கடத்தியுள்ளனர்.
 
இவ்வாறு நாடு கடத்திய ஏதிலிகளில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அகதி முகாமிலிருந்து இவர்கள் விசேட விமானம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
நாடு கடத்தப்படுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்ட 2 ஆண்களும் இந்த நாடு கடத்தப்பட்டோர் வரிசையில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை