நாடே எதிர்ப்பு தெரிவித்தபோதும் இன்றும் புது உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் 14 பைசா, டீசல் 15 பைசா அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடே எதிர்ப்பு தெரிவித்தபோதும் இன்றும் புது உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் 14 பைசா, டீசல் 15 பைசா அதிகரிப்பு

சென்னை:  நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் வரலாறு காணாத அளவில்  பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்துள்ளது.

படிப்படியாக  உயர்த்தப்பட்டு வந்த விலை தினசரி புது உச்சம் தொடுவது பொதுமக்கள்  மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

நேற்று போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே பெட்ரோல் விலை 25 பைசா உயர்த்தப்பட்டது. இது  பொதுமக்களை மேலும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோலுக்கு 14 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ₹84. 05 காசுகளாகவும், டீசல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ₹77. 13 காசுகளாகவும் விற்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இவ்வளவு எதிர்ப்பு இருந்தும், போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையிலும் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது பொதுமக்கள், அரசியல் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் சில்லரை விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பெட்ரோல், டீசல் விலையுயர்வு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

.

மூலக்கதை