மஹாராஷ்டிராவில் பர்பஹானியில் ''ரூ. 90'' ஐ தொட்டது பெட்ரோல் விலை

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிராவில் பர்பஹானியில் ரூ. 90 ஐ தொட்டது பெட்ரோல் விலை


பர்பஹானி( மஹாராஷ்டிரா):: மஹாராஷ்டிரா மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 90 ஐ வரை எகிறிவிட்டது. இதுவே இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து காங், உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாவட்டம் பர்பஹானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்க தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறியது, இம்மாவட்டத்தில் நேற்றை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 89.97, டீசல் லிட்டர் ரூ.77.92 என விலை .உயர்ந்துவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் இம்மாவட்டத்தில் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.90 ஐ தொட்டு விட்டது என்றார்.

மூலக்கதை