கரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:‘நோமுரா’ நிறுவனம் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
கரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:‘நோமுரா’ நிறுவனம் ஆய்வறிக்கை

புதுடில்லி:டால­ருக்கு நிக­ரான, அன்­னி­யச் செலா­வணி மதிப்பு குறை­வால், ஏழு வள­ரும் நாடு­கள், இடர்ப்­பாட்டை சந்­திக்க வாய்ப்­புள்­ள­தாக, ஜப்­பா­னைச் சேர்ந்த நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘நோமுரா’ தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், 30 வள­ரும் நாடு­க­ளின் கரன்சி வெளி­ம­திப்பு தொடர்­பான, ‘டமோக்ல்ஸ்’ குறி­யீட்டை வெளி­யிட்­டு உள்­ளது.இக்­கு­றி­யீடு, 100 புள்­ளி­களை தாண்­டி­னால், அடுத்த, 12 மாதங்­களில் இடர்ப்­பாட்டை சந்­திக்­கும்வாய்ப்­பும்; 150ஐ தாண்­டி­னால், எந்­த­நே­ர­மும், பிரச்னை எழ­லாம் என­வும், கரு­தப்­ப­டு­கிறது.
இது குறித்து, நோமுரா வெளி­யிட்­டுள்ள அறிக்கை:முன்­னே­றிய நாடு­க­ளின் நிதிக் கொள்­கை­யில் ஸ்தி­ரத்­தன்மை ஏற்­பட்­டுள்­ளது. அவை, உள்­நாட்டு வர்த்­த­கப் பாது­காப்­பில் கவ­னம் செலுத்­து­கின்­றன. இத­னால், வள­ரும் நாடு­களில் உள்ள இடர்ப்­பா­டு­கள் குறித்து, முத­லீட்­டா­ளர்­கள் மறு­ப­ரி­சீ­லனை செய்­கின்­ற­னர். இந்­நி­லை­யில், ஏழு வள­ரும் நாடு­கள், அவற்­றின் கரன்­சிக்கு நிக­ரான டாலர் விகித மாறு­பா­டு­க­ளால், இடர்ப்­பாட்டை சந்­திக்­கக் கூடும்.
இந்தியாஅவற்­றில், இலங்கை, 175 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், தென்­ ஆப்­ரிக்கா, 143; அர்­ஜென்­டினா, 140; பாகிஸ்­தான், 136; எகிப்து, 111; துருக்கி, 104 மற்­றும் உக்­ரைன், 100 ஆகி­யவை உள்­ளன.நடப்­பாண்டு, இந்­தி­யா­வின் சில்­லரை பண­ வீக்­கம், 4.5 சத­வீ­த­மாக உள்­ளது. இது, 2012ல், 9.7 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது. இதே காலத்­தில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 5ல் இருந்து, 2 சத­வீ­த­மாக சரிந்­துள்­ளது.ரிசர்வ் வங்­கி­யி­டம், போது­மான அன்­னி­யச் செலா­வணி கையி­ருப்பு உள்­ளது.அத­னால், ஜூலை –செப்., வரை­யி­லான இந்­தி­யா­வின் டமோக்ல்ஸ் குறி­யீடு, 25 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.இவ்­வாறு, அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை