ஒரே நாளில், ‘சென்செக்ஸ்’ 468 புள்ளிகள் சரிவு:ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தினமலர்  தினமலர்
ஒரே நாளில், ‘சென்செக்ஸ்’ 468 புள்ளிகள் சரிவு:ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை:நேற்று, சர்­வ­தேச மற்­றும் உள்­நாட்டு நில­வ­ரங்­கள் கார­ண­மாக, இந்­திய பங்­குச் சந்­தை­கள் கடும் சரிவை சந்­தித்­தன. டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, வர­லாறு காணாத வீழ்ச்சி கண்­டது.கடந்த வாரம், வெள்­ளி­யன்று, அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், சீனா­வுக்கு விடுத்த எச்­ச­ரிக்கை; நடப்பு கணக்கு பற்­றாக்­குறை உயர்வு குறித்து, ரிசர்வ் வங்கி வெளி­யிட்ட அறிக்கை ஆகி­ய­வற்­றின் தாக்­கம், முதல் வர்த்­தகதின­மான நேற்று, பங்கு மற்­றும் அன்­னி­யச் செலா­வணி சந்­தை­களில் எதி­ரொ­லித்­தது.
டிரம்ப் அதிரடி
அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், ‘‘சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் அனைத்து பொருட்­க­ளுக்­கும் வரி உயர்த்­தப்­படும்,’’ என, எச்­ச­ரிக்கை விடுத்­தார்.இதற்கு பதி­ல­டி­யாக, ‘அமெ­ரிக்க பொருட்­க­ளுக்கு வரி அதி­க­ரிக்­கப்­படும்’ என, சீனா அறி­வித்­தது.இத­னால், அமெ­ரிக்கா – சீனா இடையே, வர்த்­த­கப்போர் மேலும் தீவி­ர­மா­கும் என்ற முத­லீட்­டா­ளர்­க­ளின் அச்­சம் கார­ண­மாக, சர்­வ­தேச பங்­குச் சந்­தை­கள் சுணக்­கம் கண்­டன.ரிசர்வ் வங்­கி­யின் அறிக்­கை­யில், இந்­தாண்டு, ஏப்., – ஜூன் காலாண்­டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 1,500 கோடி டால­ரில் இருந்து, 1,580 கோடி டால­ராக உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.
கச்சா எண்­ணெய் விலை­யேற்­றத்­தால், இறக்­கு­மதி செலவு உயர்ந்து, நடப்பு கணக்கு பற்­றாக்­குறை மேலும் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இத­னால், டால­ருக்­கான தேவை நேற்று அதி­க­ரித்­தது. வர்த்­த­கத்­தின் இடையே, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, இது­வரை இல்­லாத அள­விற்கு, 72.67 ஆக வீழ்ச்சி கண்­டது.
மூடிஸ்
இந்­நி­லை­யில், ‘ரூபாய் மதிப்­பின் சரிவு தொடர்ந்­தால், இந்­திய நிறு­வ­னங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்படும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர் சர்­வீ­சஸ்’ அறிக்கை வெளி­யிட்­டது. இது­வும், பங்­குச் சந்தை வீழ்ச்­சிக்கு வழி வகுத்­தது.மும்பை பங்­குச் சந்­தை­யின் சென்­செக்ஸ், 38,000 புள்­ளி­க­ளுக்கு கீழாக சரி­வ­டைந்­தது. இக் குறி­யீடு, 467.65 புள்­ளி­கள் சரிந்து, 37,922.17 புள்­ளி­களில் நிலை கொண்­டது.இந்­தாண்டு, மார்ச், 16ல், சென்­செக்ஸ், 509.54 புள்­ளி­கள் வீழ்ச்சி கண்ட பின், நேற்று அதி­க­பட்ச சரி­வைக் கண்­டது.
தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 150.50 புள்­ளி­கள் வீழ்ச்சி கண்டு, 11,438.60 புள்­ளி­களில் நிலை கொண்­டது. இது, இந்­தாண்டு, பிப்., 6க்கு பின், ஒரே நாளில் ஏற்­பட்ட மிகப் பெரிய சரி­வா­கும்.சர்­வ­தேச நில­வ­ரங்­கள், இந்­திய நிதிச் சந்­தை­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
நேற்று, அன்­னி­யச் செலா­வணி வர்த்­த­கத்­தின் இடையே, டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, முதன் முறை­யாக, 72.67 வரை சரிந்­தது. உடனே, ரிசர்வ் வங்கி, டாலரை புழக்­கத்­தில் விட்டு, சரிவை தடுத்­தது. இத­னால், வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், ரூபாய் மதிப்பு, ௭௨.௪௫ல் நிலை கொண்­டது. இந்­தாண்டு, ரூபாய் வெளி மதிப்பு, 13 சத­வீ­தம் சரி­வ­டைந்­து உள்­ளது.

மூலக்கதை