பிரான்சில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கத்திக்குத்து தாக்குதல்: 7 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
பிரான்சில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கத்திக்குத்து தாக்குதல்: 7 பேர் படுகாயம்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள பாசின் டி லா வில்லெட்டி பகுதி மிகவும் பிரபலமானது. இங்கு இரவு 11 மணியளவில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன்  நுழைந்த மர்மஆசாமி ஒருவன் அந்தபகுதியில் கண்களில் தென்பட்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி தாக்கினான். இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனிடையே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிடைத்த பொருட்களை எறிந்து அவனை தடுத்தனர். காயமடைந்த 7 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே அங்கு விரைந்த போலீசார் கத்தியால் தாக்கிய மர்மநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

மூலக்கதை