‘டெப்ட் மியூச்சுவல் பண்டு’களில் ரூ.6,800 கோடி வெளியேறியது

தினமலர்  தினமலர்
‘டெப்ட் மியூச்சுவல் பண்டு’களில் ரூ.6,800 கோடி வெளியேறியது

புதுடில்லி:கடந்த ஆகஸ்­டில், கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யும், ‘டெப்ட் மியூச்­சு­வல் பண்டு’ திட்­டங்­களில் இருந்து, 6,803 கோடி ரூபாயை, முத­லீட்­டா­ளர்­கள் திரும்­பப் பெற்­றுள்­ள­னர்.கடந்த ஆண்டு ஆகஸ்­டில், இத்­திட்­டங்­கள், 9,810 கோடி ரூபாய் முத­லீட்டை ஈர்த்­துள்­ளன. இந்­திட்­டங்­களில், ஏப்., – ஆகஸ்ட் வரை, 52,700 கோடி ரூபாய் முத­லீடு, வெளி­யே­றி­யுள்­ளது.கடந்த ஆகஸ்­டில், ஒட்­டு­மொத்த மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­களில், இருந்து, 1.75 லட்­சம் கோடி ரூபாய் திரும்­பப் பெறப்­பட்­டுள்­ளது.
இதில், குறு­கிய காலத்­திற்கு, ரொக்­கச் சொத்­து­கள், கரு­வூல பில்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் முத­லீடு செய்­யும், ‘லிக்­யுட் மியூச்­சு­வல் பண்டு’ திட்­டங்­களில் இருந்து மட்­டும், 1.71 லட்­சம் கோடி ரூபாயை, முத­லீட்­டா­ளர்­கள் திரும்­பப் பெற்­று உள்­ள­னர்.‘‘ரூபாய் மதிப்­பின் சரிவு, கடன் பத்­திர வட்டி வரு­வாய் உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம் ஆகி­யவை கார­ண­மாக, டெப்ட் பண்­டு­களில் அதிக முத­லீடு வெளி­யே­று­கிறது,’’ என, ‘பஜாஜ் கேப்­பி­டல்’ நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, ராகுல் பரேக் தெரி­வித்­துள்­ளார்.

மூலக்கதை