குரலின் தரம் கூடும் ‘ஏர்டெல்’ அறிவிப்பு

தினமலர்  தினமலர்
குரலின் தரம் கூடும் ‘ஏர்டெல்’ அறிவிப்பு

சென்னை:தமி­ழ­கத்­தில், ‘4ஜி’ மொபைல் போன் பயன்­பாட்­டா­ளர்­க­ளின், குரல் தரத்தை மேம்­ப­டுத்த, தொழில்­நுட்­பத்தை நவீ­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக, ‘ஏர்­டெல்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.இது குறித்து, ஏர்­டெல் நிறு­வ­னம் வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு:இந்­தி­யா­வில், முன்­னணி தொலை தொடர்பு சேவை நிறு­வ­ன­மாக ஏர்­டெல் திகழ்­கிறது. தமி­ழ­கத்­தில், 2.3 கோடி ஏர்­டெல் வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ள­னர்.
சமீ­ப­கா­ல­மாக, மொபைல் போனில் பேசும் போது, சிக்­னல் கோளாறு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­னை­கள் இருப்­ப­தாக, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து புகார்­கள் வந்­தன.இதை­ய­டுத்து, 4ஜி வாடிக்­கை­யா­ளர்­கள் பயன் பெறும் வகை­யில், இந்­நி­று­வ­னம் தொழில்­நுட்­பத்தை மேம்­ப­டுத்­தி­ உள்­ளது. மொபை­லில் பேசும் போது, குரல் தரம் சிறப்­பாக இருக்­கும் வகை­யில், நவீன தொழில்­நுட்­பக் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னால், இனி குர­லின் தரம் மற்­றும் ‘இன்­டர்­நெட்’ வேகம் சிறப்­பாக இருக்­கும்.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை