உறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை

தினமலர்  தினமலர்
உறவு மேம்பட பாக்.,கிற்கு அமெரிக்கா நிபந்தனை

வாஷிங்டன்: பயங்கரவாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே பாகிஸ்தானுடனான உறவு மேம்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

பேச்சளவில் கூடாது

இது தொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல் கூறுகையில், ஆப்கனில் ஸ்திரத்தன்மை ஏற்பட பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தருவதையும், தனது மண்ணில் பயங்கரவாதிகள் செயல்படுவதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையில் பேச்சுவார்த்தை நடந்த போது, ரஷ்யாவுடனான, அந்நாட்டின் நட்பை நாங்கள் புரிந்து கொண்டோம். ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதம் வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை