இலங்கையில் நள்ளிரவு முதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி..!!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் நள்ளிரவு முதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி..!!

நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் அதற்கு சமமான விலை சூத்திரத்திற்கமைய இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது..
 
விலை சூத்திரத்தை ஆராயும் குழு நேற்று மாலை நிதி அமைச்சில் கூடி தீர்மானம் எடுத்துள்ளது. 
 
அதற்கமைய ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றில் விலை 4 ரூபாவில் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 149 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 123 ரூபா என குறிப்பிடப்படுகின்றது.
 
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 133 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை