கார் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி

தினமலர்  தினமலர்

மொகதீஷு: சோமாலிய தலைநகர் மொகதீஷுவில் பயங்கர வாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். சோமாலியாவில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திய அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர்.தலைநகர் மொகதீஷு அருகில் உள்ள ேஹாடன் மாவட்ட தலைமையகம் அருகே நேற்று கார் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுஉள்ளதாக போலீஸ் அதிகாரி இப்ராகிம் முகம்மது தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பை நேரில் பார்த்த நுர் ஆடன் கூறியது: குண்டு வெடித்த சப்தம் 2 கி.மீ. வரை கேட்டது. அந்த பகுதியே தீப்பிழம்பாக இருந்தது.அருகருகே உள்ள 2 மசூதிகள் முற்றிலும் உருக்குலைந்துள்ளன. ஏராளமான உடல்கள் இடிபாடுகளுக்குள் கிடக்கின்றன, என்றார். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவின் சார்பு அமைப்பான ஷாபாப் பொறுப்பேற்றுள்ளது.

மூலக்கதை