லிபிய எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

தினமலர்  தினமலர்

லிபியா: திரிபோலியில் உள்ள ஐ.நா ஆதரவு பெற்ற அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர்.ஆயுதக்குழுவினருடன் அங்கிருந்த பாதுகாப்பு படைகள் மோதினர். சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க ஜன்னலில் இருந்து வெளியே குதித்த தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், மூன்று அல்லது ஐந்து துப்பாகிதாரிகள் சுட்டுக் கொண்டிருந்ததாகவும், பலர் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.கட்டடத்தில் இருந்து வெளியே வரும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.லிபியா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வளம். நீண்ட காலம் ஆட்சி செய்த கடாபி 2011ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் வெடித்து வந்தன.சமீபத்தில் நடந்த வன்முறையானது, ஆயிரக்கணக்கான மக்களை அருகில் உள்ள நகரங்களுக்கு வெளியேற்றியதோடு, பலரை வீட்டில் இருந்து வெளிவர விடாமல் செய்துள்ளது.

மூலக்கதை