விமான தாக்குதல்: 84 பேர் பலி

தினமலர்  தினமலர்

கோஹா: ஏமன் நாட்டில், நடத்தப்பட்ட விமான தாக்குதலில், 84 பேர் உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள ஏமன் நாட்டில், அரசுக்கு எதிராக, ஈரான் ஆதரவுடன், ஹவுதி பயங்கரவாதிகள், இரண்டு ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியா தலைமையிலான சர்வதேச கூட்டுப் படை, ஏமன் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.இந்நிலையில், ஹோடேய்டா நகரில், நேற்று நடந்த விமான தாக்குதலில், இரு தரப்பிலும், 84 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை