தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பது...தீவிரம்:நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் சுறுசுறுப்பு

தினமலர்  தினமலர்

கம்பம்:மத்திய அரசின் நுாறு நாள் வேலைதிட்டத்தின் கீழ் கிராமங்களில்தனியார் தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பது, வரப்புக்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள்செய்ய பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஊராட்சி செயலர்கள் இதில் கவனம் செலுத்துகின்றனர்.
கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நுாறுநாள்வேலைவாய்ப்பு திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது பணியாளர்களுக்கு நாள் சம்பளமாக தலா ரூ. 224 தரப்படுகிறது.
அதிலும் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது.துவக்கத்தில் கண்மாய், மயானம், சிறு ஊரணிகள் உள்ளிட்ட ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் பராமரிப்பு,துார்வாருவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 'டெங்கு' தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது அப்பணிகள் இல்லாததால்கிராமங்களில் சிறுகுறு விவசாயிகளின் தோட்டங்களில் இலவசமாக பண்ணைக்குட்டைகள் அமைப்பது, வரப்புக்களைசமன்படுத்துவது உள்ளிட்ட விவசாய பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளிடம் சிறுகுறுசான்று பெற்று, பதிவு செய்து அவர்களின் தோட்டப்பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். . இதன் மூலம் அவர்களுக்கு வேலையிழப்பு என்ற நிலை இல்லை.ஊராட்சி செயலர்கள் கூறுகையில், பொருளாதாரம் மேம்பட இத்திட்டத்தில் தினமும் கண்டிப்பாக 75 பயனாளிகள், கிராமங்களில் உள்ள தனியார் தோட்டங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பண்ணைக்குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது, 'என்றனர்.

மூலக்கதை