விசாரணை வளையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விசாரணை வளையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள்

மும்பை:  இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான  டெஸ்ட் தொடர்களில் தன் மோசமான தோல்விகளால்  கிரிக்கெட்  ஆர்வலர்கள்  மத்தியில் கடுமையான  விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பாக இந்திய அணியின் மோசமான தோல்விக்கும், பெர்பாமன்ஸ்க்கும் காரணம்  பயிற்சியாளர்கள், கேப்டன், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் என பல்வேறு நபர்களை  கூறியுள்ளனர்.   இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து பிசிசிஐ என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது.   இது குறித்து பிசிசிஐயின் நிர்வாக தலைவர் வினோத் ராய் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். அப்போது அவர் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுபயணம் முடிந்த உடன் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.



இது குறித்து நிருபர்களிடம் வினோத் ராய் கூறுகையில் : நான் எந்த வாக்கும் கொடுக்கவில்லை. ஆனால், எப்பொழுதும் அணி மேலாளர் சமர்ப்பிக்கும் ஆய்வை கொண்டு விமர்சனம் செய்யப்படும்.

அதை வைத்து நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம். என கூறியுள்ளார்.   இந்திய அணியின் மோசமான பெர்பாமன்ஸ் காரணமான இந்திய அணியின் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என  பிசிசிஐ நிர்வாகத்திற்குள்ளேயே பலமான பேச்சு அடிபடுகிறது.

மேலும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த பிறகு கடுமையான எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய சூழல்  இருக்கும் என தெரிகிறது.

குறிப்பாக  கங்குலி, கவாஸ்கர் , ரவி சாஸ்திரி, கோலி ஆகியோரது செயல்பாடுகள் சரியில்லை என வெளிப்படையாக புகார் கிளம்பியுள்ள நிலையில்  அதிரடி மாற்றங்கள்   ஏதும் நிகழுமா? என்ற சந்தேகமும் உள்ளது.

.

மூலக்கதை