இன்று நாடு தழுவிய முழு அடைப்பு கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பஸ்கள் ஓடவில்லை: பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று நாடு தழுவிய முழு அடைப்பு கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பஸ்கள் ஓடவில்லை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று நடக்கும் பந்தால் கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அரசு பஸ்கள் ஓடவில்லை.

கடைகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

கேரளாவில் இடது முன்னணி கட்சிகளும், போராட்டத்துக்கு ஆதரவு ெதரிவித்துள்ளது.   கேரளாவில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.   முழு அடைப்பு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவே நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இன்று காலை முதல் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், டாக்சி, ஆட்டோ என எந்த வாகனமும் ஓடவில்ைல. கார், பைக் போன்ற தனியார் வாகனங்கள் மட்டுமே சாலையில் ஓடுகின்றன.கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் ஓடாததால் அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. பாறசாலையில் இன்று அதிகாலை தமிழக அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது.

கொல்லங்கோட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற பஸ் மீது பாறசாலையில் வைத்து கல்வீசப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி சேதம் அடைந்தது.

இதுேபால் இடுக்கியிலும் கேரள அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது.   இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குருவாயூரில் இன்று 170க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.

இன்று முழு அடைப்பு போராட்டம் என்பதால் நேற்றே திருமண வீட்டினர் குருவாயூர் வந்துவிட்டனர். இதனால் லாட்ஜ்கள், ேஹாட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

நேற்றே ஏராளமானோர் குவிந்ததால் ஹோட்டல்களில் உணவு விரைவில் தீர்ந்தது.

பெட்ரோல், டீசல் விைல உயர்வை கண்டித்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகர்களிலும் கங்கிரஸ், இடது முன்னணி கூட்டணியினர் கண்டன பேரணி நடத்தினர்.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் அதைதொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து பந்தில் இருந்து கேரளாவுக்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

ஆனால் கேரளாவிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் கூட்டணியும், இடதுமுன்னணி கட்சிகளும் கூறின.

இந்த முழு அடைப்பு போராட்டத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு உள்பட அனைத்து பகுதிகளிலும் நிவாரண பணிகள் முடங்கியுள்ளன.

.

மூலக்கதை