திருவொற்றியூரில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவொற்றியூரில் திமுக ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக, பாமக, தமாகா, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கிழக்கு பகுதி திமுக செயலாளர் தி. மு. தனியரசு தலைமையில், நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், பரமானந்தம், ஆர். எஸ். சம்பத், ஆசைத்தம்பி, இளவரசன், ஆதிகுருசாமி உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகள் குறித்து விளக்கி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினர்.

அப்போது விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜ அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

.

மூலக்கதை