எலிகாய்ச்சலை தடுக்க தமிழக, கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எலிகாய்ச்சலை தடுக்க தமிழக, கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை: கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதித்த போதே கால்நடைகளுக்கு நோய்கள் பரவுவதை தடுக்க ரூ. 50 லட்சம் மதிப்பிலான கால்நடை எதிர்ப்பு சக்தி மருந்துகளை அனுப்பியுள்ளோம். தமிழக கேரள எல்லையில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை.

எல்லை பகுதியில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட எல்லைகளிலும் கால்நடை மருத்துவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கால்நடைகள் முழு பரிசோதனை செய்து ஊசிகள் போட்ட பின் தான் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. எல்லை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணிகள் நடக்கிறது.

கால்நடைகள், செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கால்நடை கிளை நிலையம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

மொபைல் ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

.

மூலக்கதை