உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உடலில் மின்சாரம் பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த சின்னச்சாமி மனைவி ஜோதி(38). இவருக்கு 21 வயதில் மகனும், 19 வயதில் மகளும் உள்ளனர்.

பவானி அடுத்த சிங்கம்பேட்டை ஆனந்தபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், 7 வயதில் மகன், ஒரு வயதில் மகள் உள்ளனர்.

சுரேஷ்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். வேலை தொடர்பாக பல இடங்களுக்கு செல்வார்.

அப்போது ஜோதிக்கும், இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாகவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் மாயமாகினர்.

இந்நிலையில், இன்று காலை அத்தாணி வரதன்தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தின்கீழ் ஜோதியும், சுரேசும் இறந்துகிடந்தனர். மின்கம்பி ஒன்று அவர்கள் மீது கிடந்தது.

அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது. ஆப்பக்கூடல் போலீசார் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

சடலங்கம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருவரும் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுத்து உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


.

மூலக்கதை