இந்தியா - இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் இங்கிலாந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா  இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் இங்கிலாந்து

ஓவல் :  இங்கிலாந்து  இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது.

ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார்.

அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜடேஜா உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது.

ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார்.

மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது.

ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.   இந்தியா 40 ரன்கள் பின்தங்கிய நிலையில்  இதனையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள இங்கிலாந்து அணி,  2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

குக் 46 ரன்களுடனும், ஜோ ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

.

மூலக்கதை