அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

நியூயார்க் :  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில்  கலப்பு இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து நாட்டின் ஜேமி முர்ரே மற்றும் அமெரிக்காவின் பெத்தனி மேட்டிக்-சாண்ட்ஸ் இணையை எதிர்த்து, குரோஷியாவின் நிகோலா மெக்டிக் மற்றும் போலந்தின் அலிக்ஜா ரொசால்ஸ்கா இணை விளையாடியது.

ஆட்டத்தின் இறுதியில்  முர்ரே மற்றும் பெத்தனி இணை 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் நிகோலா மற்றும் அலிக்ஜா இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.



இறுதிப் போட்டியில் அவருடன், அர்ஜெண்டினாவின் யுவான் மார்ட்டின் டெல் பொட்ரோ மோதினார். 95 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார். உலகின் 6ம் நிலை வீரரான ஜோகோவிச், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 14வது முறையாக வென்று சாம்ராஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது 3வது முறையாகும். இதன் மூலம் ரூ.

27 கோடியை பரிசாக பெற்றார்.


.

மூலக்கதை